Home Featured நாடு கண்டெடுக்கப்பட்டது எம்எச்370 பாகம் தானா? – நாளை விசாரணை

கண்டெடுக்கப்பட்டது எம்எச்370 பாகம் தானா? – நாளை விசாரணை

609
0
SHARE
Ad

Liow-Tiong-Laiசெர்டாங், ஆகஸ்ட் 4 – ரியூனியன் தீவு கடற்பகுதியில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் சிதைந்த பாகம் எம்எச்370 விமானத்தினுடையதா என்பதை சரிபார்க்கும் ஆய்வுப் பணி நாளை புதன்கிழமையன்று தொடங்கும் என போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த ஆய்வுப் பணி எப்போது முடிவடையும் என்பதை இப்போதே துல்லியமாக உறுதிபடத் தெரிவிக்க இயலாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அண்மையில் ரியூனியன் பகுதியில் போயிங் 777 ரக விமானத்தின் இறக்கையின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இது மாயமான எம்எச் 370 விமானத்தினுடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டதால், பிரான்ஸ் நாட்டின் டுலுஸ் நகருக்கு ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.

“இந்த ஆய்வுடன் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளும் டுலுஸ் நகருக்கு வந்து சேர்ந்த பிறகே விமானத்தின் சிதைந்த பாகம் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இது மிகச் சிக்கலான ஆய்வுப் பணி. எனவே அதற்குரிய நடைமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டியது அவசியம். எனவே நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியுள்ளது,” என்று லியாவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அமெரிக்காவில் உள்ள போயிங் உற்பத்திப் பிரிவு நிபுணர்களைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், அதன் முடிவில் சிதைந்த பாகமானது எம்எச் 370 விமானத்தினுடையதா என்பது தெரியவரும் என்றும் அவர் மேலும் கூறினார்.