Home தொழில் நுட்பம் விரைவில் விண்டோஸ் 10 புதிய உலாவியிலும் ‘வாட்ஸ்அப் வெப்’ சேவை!

விரைவில் விண்டோஸ் 10 புதிய உலாவியிலும் ‘வாட்ஸ்அப் வெப்’ சேவை!

688
0
SHARE
Ad

whatsappகோலாலம்பூர், ஆகஸ்ட் 4 – திறன்பேசிகள் மட்டுமல்லாது கணினியிலும் பயன்படும் வாட்ஸ்அப் வலைத்தள சேவை (Whatsapp Web), இதுநாள் வரை விண்டோஸ் உலாவியான (Bowser) இன்டர்நெட் எக்ஸ்பிளோரரில் மட்டும் மேம்படுத்தப்படாமல் இருந்து வந்தது. அதற்கு மிக முக்கியக் காரணம், மைக்ரோசப்ட், விண்டோஸ் 10-ல் புதிய உலாவியை உருவாக்க முடிவு செய்ததனால் தான்.

கடந்த 29-ம் தேதி, விண்டோஸ் 10 வெளியானது. அதில், புதிய உலாவியாக ‘எட்ஜ்’ (Edge) மேம்படுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், புதிய உலாவியாவது வாட்ஸ்அப் சேவையை ஏற்குமா? என்ற கேள்வி பயனர்கள் மத்தியில் இருந்து வந்தது. இதற்கு விடை அளிக்கும் விதமாக, புதிய உலாவி விரைவில் வாட்ஸ் அப் வெப் சேவையை ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த வசதி எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பது தெரியவில்லை. இந்த எட்ஜ் உலாவி, இன்டர்நெட் எக்ஸ்பிளோரரை விட 112 சதவீதம் அதிவேகமானது என்பது கூடுதல் தகவலாகும்.