Home Featured நாடு “நஜிப் வங்கிக் கணக்கில் 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை தொகை”

“நஜிப் வங்கிக் கணக்கில் 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை தொகை”

688
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 2.6 பில்லியன் ரிங்கிட் தொகையானது நன்கொடையாக வந்தது என்றும், அத்தொகை 1எம்டிபியில் இருந்து வந்த தொகையல்ல என்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கை அட்டர்னி ஜெனரலிடம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

macc-building“பிரதமரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் உள்ள 2.6 பில்லியன் ரிங்கிட் தொகை குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் அத்தொகை பல்வேறு நன்கொடையாளர்களால் வந்தது எனத் தெரியவந்தது. மாறாக அது 1எம்டிபியில் இருந்து வரவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” என ஊழல் தடுப்பு ஆணையம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

#TamilSchoolmychoice

சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டபோது, 1எம்டிபி விவகாரங்கள் மற்றும் பிரதமரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் உள்ள 2.6 பில்லியன் ரிங்கிட் தொகை குறித்து மட்டுமே விசாரணை நடத்துவது என ஊழல் தடுப்பு ஆணையம் முடிவு செய்ததாக கூறப்பட்டுள்ளது.

“காவல்துறைக்கு ஊழல் தடுப்பு ஆணையம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சியில் ஆணையத்தைச் சேர்ந்த எந்தவொரு அதிகாரிக்கும் பங்கில்லை. ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்துமே எந்தவித அச்சமும், ஆதாயமும் இன்றி, சுதந்திரமாகச் செயல்படும் ஆணையம் ஒன்று மேற்கொண்ட நடவடிக்கைகளே,” என அந்தச் செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.

விசாரணை முழுமையடையும் வரை பொதுமக்கள் ஆரூடங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணை அரசு வழக்கறிஞர் (டிபிபி) கடந்த சனிக்கிழமை கைதானார் என்பது குறிப்பிடத்தக்கது.