கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய துணைத் தலைவராக முகமட் ஜாமிடான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மேலாண்மை மற்றும் நிபுணத்துவ பிரிவுக்கு பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
57 வயதான ஜாமிடான், தற்போது புலனாய்வு இயக்குநராக பதவி வகித்து வருவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
தற்போது அப்பொறுப்பை வகிக்கும் 58 வயதான டத்தோஸ்ரீ சகாரியா ஜாஃபர் ஓய்வு பெற உள்ளார். அக்டோபர் 12-ம் தேதி அவர் ஓய்வு பெறும் நிலையில் ஜாமிடான் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே ஜாமிடானுக்குப் பதிலாக டத்தோ முகமட் அசம் பாகி (52 வயது) புதிய புலனாய்வு இயக்குநராகப் பொறுப்பேற்பதாக மலேசிய ஊழத் தடுப்பு ஆணையம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இந்த அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்துள்ளன.