Home Featured கலையுலகம் அப்துல் கலாம் பெயரில் பசுமை – கல்வித் திட்டத்திற்கு 1 கோடி நிதி – லாரன்ஸ்...

அப்துல் கலாம் பெயரில் பசுமை – கல்வித் திட்டத்திற்கு 1 கோடி நிதி – லாரன்ஸ் அறிவிப்பு

779
0
SHARE
Ad

Lawrenceசென்னை, ஆகஸ்ட் 4 – சென்னை வடபழனியில் நேற்று நடைபெற்ற ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘நாகா’ ஆகிய இரண்டு படங்களின் அறிமுக விழாவில், ஓர் முக்கியமான அறிவிப்பை செய்து, நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டார் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ்.

வேந்தர் மூவீஸ் பட நிறுவனம் தயாரிக்க ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘நாகா’ என்ற இரண்டு படங்களில் தானே கதாநாயகனாகவும் நடித்து, அப்படங்களை இயக்கியும் வருகிறார் லாரன்ஸ்.

இந்நிலையில், வேந்தர் மூவீஸ் தயாரிப்பாளர் மதன் சம்பள முன்பணமாக தனக்கு அளித்த 1 கோடி ரூபாயை அப்படியே மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் பெயரில் ஏழைக் குழந்தைகளின் கல்வி மற்றும் மரக்கன்றுகள் நடும் ‘பசுமை’ திட்டத்துக்கு வழங்குவதாக லாரன்ஸ் விழா மேடையிலேயே அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதனால் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் மட்டுமின்றி, அங்கிருந்த பத்திரிக்கையாளர்களும், லாரன்சின் அறிவிப்பை கேட்டு ஆச்சர்யமடைந்ததோடு, அவரை மனமாரப் பாராட்டியுள்ளனர்.