Home Featured நாடு என்னது 2.6 பில்லியன் நன்கொடையா? – நட்பு ஊடகங்களில் கேலி கிண்டல்கள்!

என்னது 2.6 பில்லியன் நன்கொடையா? – நட்பு ஊடகங்களில் கேலி கிண்டல்கள்!

656
0
SHARE
Ad

Najib 1MDB

கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வந்த 2.6 பில்லியன் ரிங்கிட், நன்கொடையாக வந்தது என்று நேற்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அறிவித்ததைத் தொடர்ந்து, நட்பு  ஊடகங்களில் நஜிப்புக்கு எதிராகப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

அது போன்று கருத்துத் தெரிவிப்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைப்பிரதமர் அகமட் சாஹிட் ஹமிடி அறிவித்தும் கூட, மலேசியர்கள் அதைப் பொருட்படுத்தாமல், #DearNajib என்ற குறியீட்டுச் சொல்லில் நஜிப்பை கேலியும், கிண்டலும் செய்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

“எனக்கு யாராவது நன்கொடை அளிப்பீர்களா?”, “எனது கல்விக் கடனுதவியை அடைக்க முடியுமா?” என மலேசியர்கள் பலர் எம்ஏசிசி-ன் அறிவிப்புக்கு எதிராக கேலி செய்து வருகின்றனர்.

அதில் பெரும்பாலானவர்கள், “2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை யாரிமிருந்து வந்தது?” “அந்தத் தொகை இப்போது எங்கே?” போன்ற கேள்விகளையும் பதிவு செய்து வருகின்றனர்.