Home இந்தியா 15 பச்சையப்பன் கல்லூரி மாணவ-மாணவியர் புழல் சிறையில் அடைப்பு!

15 பச்சையப்பன் கல்லூரி மாணவ-மாணவியர் புழல் சிறையில் அடைப்பு!

456
0
SHARE
Ad

TASMAC-சென்னை, ஆகஸ்ட் 4 – சென்னையில் நேற்று, டாஸ்மாக் கடை மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த 15 மாணவ-மாணவியர் மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த மாணவ-மாணவியர் நேற்று அமைந்தக்கரை பகுதியில் உள்ள மதுக்கடைக்கு எதிராக பெரும் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தின் இறுதியில், மதுக்கடையை நோக்கி கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர். அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர், மாணவ-மாணவியரை அடித்து தாக்குதல் நடத்தி அந்த பகுதியில் இருந்து விரட்டி அடித்தனர். பலரை கைதும் செய்தனர்.

இந்நிலையில் தான், மாணவ-மாணவியர் மீது பொதுச் சொத்துக்கு பங்கம் விளைவித்தது, காவல் துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 12 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட 15 பேரையும், 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அவர்கள், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

மாணவ-மாணவியர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் மிகப் பெரும் மாணவப் புரட்சியாக மாற வாய்ப்புள்ளது.