Home இந்தியா பூரண மதுவிலக்கு: சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்!

பூரண மதுவிலக்கு: சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்!

713
0
SHARE
Ad

Madras-Universityசென்னை, ஆகஸ்டு 4- தமிழகம் முழுவதிலும் பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்தக் கோரி சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

பள்ளி, கல்லூரி, கோவில் முதலான இடங்களுக்கு அருகில் உள்ள கடைகளை உடனே நீக்கக் கோரி காந்தியவதி சசிபெருமாள் போராட்டத்தைத்தொடங்கி வைத்து, அந்தப் போராட்டத்திற்காகத் தன் உயிரையே கொடுத்தார். அவர் ஏற்றி வைத்த போராட்டத் தீ இப்போது தமிழகமெங்கும் பற்றிக் கொண்டு எரிகிறது.

சசிபெருமாளின் மரணத்தைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினரும் மதுவிற்கு எதிரான போராட்டத்தில் உடனடியாக இறங்கியுள்ளனர். மதுக்கடைகளை அகற்றிய பிறகே சசிபெருமாளின் உடலைப் பெற்றுக் கொள்வோம் எனத் திட்டவட்டமாக அறிவித்து அவரது மகன்களும் மனைவியும் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

அவர்களைத் தொடர்ந்து வைகோ தனது சொந்த ஊர் கலிங்கப்பட்டியில் போராட்டம் நடத்த, காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டை வீசிப் போராடடக்காரர்களைக் கலைக்கும் அளவிற்கு அது பெரும் பிர்ச்ச்சினையாகிப் போனது.

அதைத் தொடர்ந்து,சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்டத்தில் குதித்ததுடன் அருகே உள்ள டாஸ்மாக் கடையையும் அடித்து நொறுக்கினர்.அவர்கள் மீது தடியடி நடந்தது.

அதன் நீட்சியாக மதுவுக்கு எதிராகவும் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்தக் கோரி சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேர் நேற்று காலை 10.30 மணி முதல் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தமிழக அரசு உடனடியாக மது விலக்கை அமல்படுத்தாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும்,சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் மதுவுக்கு எதிராகக் கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கியுள்ளனர்.

சென்னைப் பல்கலைக்கழகப் பதிவாளர் பா.டேவிட் ஜவகர் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் போராடடத்திக் கைவிடாத காரணத்தால், அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருப்பதற்காக அங்கே பலத்த காவல்துறைப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.