Home Featured நாடு அம்னோ மவுனம் காப்பது சரியல்ல – காலிட் நோர்டின்

அம்னோ மவுனம் காப்பது சரியல்ல – காலிட் நோர்டின்

733
0
SHARE
Ad

KhaledNordinஜோகூர்பாரு, ஆகஸ்ட் 5 – ஊழல் என்பது கட்சியில் ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது எனில் அம்னோ மவுனம் காப்பது சரியல்ல என்று ஜோகூர் மந்திரிபெசார் டத்தோ முகமட் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.

துணைப் பிரதமராக இருந்த டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், அவர் தமது முகநூல் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அப்பதிவில் அம்னோ குறித்த தமது கருத்துக்களையும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

கூடுதல் செயல்திறனுடனும், ஆதிக்கத்துடனும் செயல்படுவதன் வழி கட்சி முன்னோக்கிச் செல்ல பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இதுவே அதற்கான தருணம் என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“ஊழல் லஞ்சம் ஆகியவையும், நம்பிக்கைத் துரோகமும் கட்சியில் ஒரு கலாச்சாரமாக உள்ளது எனில் அம்னோ மவுனம் காக்கக்கூடாது. கட்சி எதிர்நோக்கும் போராட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனில் அம்னோ வாய்மூடிக் கிடப்பது சரியல்ல. மேலும், கட்சிக்கான விசுவாசம் என்ற பெயரில் சில தனி நபர்களை தற்காக்க இத்தகைய போராட்டங்கள் பயன்படுத்தப்படுகிறது எனில் மவுனம் காப்பது கூடாது,” என்று காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.