Home Featured நாடு பேஸ்புக்கில் அச்சுறுத்தலான பதிவுகள் – உரிமையாளர் விசாரணைக்கு அழைப்பு

பேஸ்புக்கில் அச்சுறுத்தலான பதிவுகள் – உரிமையாளர் விசாரணைக்கு அழைப்பு

540
0
SHARE
Ad

facebookகோலாலம்பூர், ஆகஸ்ட் 5 – ஷாரிஃபா சோஃபியா சையட் ரஷிட் என்ற பெயரில் இயக்கப்பட்டு வரும் பேஸ்புக் பக்கத்தின் உரிமையாளர் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

அக்குறிப்பிட்ட பேஸ்புக் பக்கத்தில் அரசு தரப்பால் உறுதி செய்யப்படாத பல்வேறு தகவல்கள் பதிவுகளாக இடம்பெற்றுள்ளதாகவும், இத்தகைய உண்மைக்குப் புறம்பான தகவல்களை அந்த பேஸ்புக் பக்கத்திற்கு உரியவர் பரப்பி வருவதாகவும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் தெரிவித்துள்ளது.

அந்த ஆணையத்தின் கண்காணிப்பு மற்றும் அமலாக்கத்துறையின் தலைவரான சுல்கர்னைன் முகமட் யாசின் கூறுகையில், “அக்குறிப்பிட்ட நபர் இதே நோக்கத்திற்காக ஷாரிஃபா, கேப்டன் ஷாரிஃபா என்ற பெயர்களிலும் பேஸ்புக் பக்கங்களை இயக்கியது எங்களது ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்தப் பக்கங்களில் காணப்படுவது உண்மைக்குப் புறம்பான தகவல்கள் மட்டுமல்ல, பொதுப் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக உள்ளன,” என்றார்.

#TamilSchoolmychoice

இக்குறிப்பிட்ட பேஸ்புக் பக்கத்திற்கு உரியவர் குறித்த தகவல்கள் அறிந்த சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

“தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் 211 அல்லது 223ஆவது பிரிவுகளின் கீழ், பொய்யான தகவல்களைப் பரப்ப முயற்சிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

முகநூலில் உள்ள தங்களது கணக்கு தவறாகப் பயன்படுத்தப்படுவதாக அறிந்தால் அது குறித்து ‘ஃபேஸ்புக்’ நிர்வாகத்திடம் உடனடியாக புகார் அளிக்க வேண்டும். இதன் மூலம் அக்கணக்கு மூடப்படும். இது தொடர்பாக தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடம் aduanskmm@cmc.gov.my என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம்,” என்று சுல்கர்னைன் முகமட் யாசின் கூறினார்.