Home Featured நாடு மாடல் அழகி பெர்சானா வழக்கு 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

மாடல் அழகி பெர்சானா வழக்கு 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

657
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 – பொது இடத்தில் மேலாடையைக் கழற்றி அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள மாடல் அழகி பெர்சானா அவ்ரில் சொலுன்டா மீதான வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Persana-Avril-Sollunda-women removed tops-petaling street

பெர்சானா அவ்ரில் சொலுன்டா – (படம்: நன்றி: சபாகினி)

#TamilSchoolmychoice

கடந்த ஏப்ரல் மாதம் அவர் இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொண்டது தொடர்பில் காணொளிப் பதிவு ஒன்று தகவல் ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து ஏப்ரல் 25ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.

உணவகம் ஒன்றில் 18 வெள்ளிக்கு உணவருந்திய பின்னர் அத்தொகையை கொடுக்க மறுத்து அவர் அநாகரிகமாக செயல்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து குற்றவியல் சட்டப்பிரிவு 342ன் கீழ் 33 வயதான பெர்சானாவுக்கு ஒரு மாத காலம் மனோதத்துவ மதிப்பாய்வு (psychiatric evaluation) செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னர் பெர்சானாவின் உடல்நிலை குறித்த அறிக்கையை தயாரிக்க மருத்துவமனைக்கு கூடுதல் அவகாசம் அளிக்கும் விதமாக இந்த உத்தரவை மேலும் ஒரு மாதம் நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பேராக், தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள பாஹாகியா மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார் பெர்சானா.

எனினும் அவரது மருத்துவ அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லை என துணை அரசு வழக்கறிஞர் நூர் ஸ்வெட்லானா முகமட் நூர் நோர்டின் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, வழக்கு விசாரணை இம்மாதம் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.