Home நாடு உணவுக்கு பணம் தர மறுத்து மேலாடையை கழற்றிய பெண் கைது! போதையில் இருந்தார்! 

உணவுக்கு பணம் தர மறுத்து மேலாடையை கழற்றிய பெண் கைது! போதையில் இருந்தார்! 

1101
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப் 27 – இரண்டு தினங்களுக்கு முன்னர் பெட்டாலிங் சாலையில் தான் சாப்பிட்ட உணவுக்கு 18 வெள்ளியை தர மறுத்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர், பொது இடத்தில் பலர் முன்னிலையில் திடீரென தனது மேலாடையை கழற்றி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டதோடு, அந்த காட்சி காணொளியாக நட்பு ஊடகங்களிலும் பரவி மலேசியர்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Woman strips refusing to payதற்போது 32 வயதான அந்தப் பெண் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனையில் அவர் ‘மெத்தாம்பெத்தாம்மின்’ என்ற போதைப் பொருள் உட்கொண்டிருப்பது தெரியவந்துள்ளதாக காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.

மேலாடையைக் கழட்டிய காட்சி காணொளியாக…

#TamilSchoolmychoice

கடந்த வியாழக்கிழமை மதியம் 3 மணியளவில் தலைநகர் பெட்டாலிங் சாலையிலுள்ள ஓர் உணவகத்துக்கு ஆடவர் ஒருவருடன் சென்ற அப்பெண் அங்கு கோழி சோறு (Chicken Rice) கேட்டுள்ளார்.

இதையடுத்து அவர் 2 கோழி சோறு சாப்பிட்டதாகவும், பின்னர் பணம் தராமல் உணவகத்திலிருந்து கிளம்பிச் செல்ல முயற்சி செய்ததாகவும், அருகில் உள்ள கடையின் உரிமையாளரான வோங் தெரிவித்திருந்தார்.

“உணவகத்தின் உரிமையாளர் அப்பெண்ணைத் தடுத்தி நிறுத்தி பணம் கேட்டபோது, தான் அங்கு சாப்பிடவே இல்லை என்று அப்பெண் சாதித்தார். எனினும் உணவகத்திலுள்ள கண்காணிப்பு கேமராவில் அவர் அங்கு சாப்பிடும் காட்சி பதிவாகியிருந்தது. அதை உணவக உரிமையாளர் காண்பித்தவுடன், பணம் தராமல் இருப்பதற்காக, திடீரென தனது மேலாடையை அப்பெண் கழற்றத் தொடங்கினார்” என அருகில் இருந்த கடைக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்தக் காட்சி காணொளிப் பதிவாக யூ டியூப்பில் சில மணி நேரங்களில் வெளியிடப்பட்டு படு வேகமாகப் பரவியது. எனினும் பின்னர் அப்பதிவு நீக்கப்பட்டது.

அச்சம்பவத்துக்கு பின்னர் அப்பெண்ணும் உடன் வந்த ஆடவரும் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் வரும் முன்னர் தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவம் பற்றிய இரண்டாவது காணொளிப் பதிவு ஒன்றும் நட்பு ஊடகங்களில் மீண்டும் பரவியுள்ளது. அந்த காணொளியில் அந்தப் பெண்மணி மேலாடை கழட்டப்பட்ட நிலையில் அரை நிர்வாணமாகக் காட்சி தருகின்றார்.

கடந்த சனிக்கிழமை சபாவைச் சேர்ந்த அந்த மலேசியப் பெண்மணி காலை 5.30 அளவில் ஜாலான் சுல்தானிலுள்ள ஓர் தங்கும் விடுதியில் கைது செய்யப்பட்டதாக டாங் வாங்கி காவல் நிலையத் தலைவர் துணை ஆணையர் சைனோல் சாமா உறுதிப்படுத்தியுள்ளார்.

அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோதே அவர் போதைப் பொருள் உட்கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது.