Home கலை உலகம் பிரபுதேவா தயாரிக்கும் படங்கள் அறிவிப்பு

பிரபுதேவா தயாரிக்கும் படங்கள் அறிவிப்பு

968
0
SHARE
Ad

Prabu-Devaசென்னை, ஆகஸ்டு 4- நடிகரும்  இயக்குநருமான பிரபுதேவா, ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ என்னும் புதுத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி  மூன்று தமிழ்ப் படங்களைத் தயாரிக்கவுள்ளார்.

ஏற்கனவே அவர் நல்ல திறமைசாலிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பளிக்கப் போவதாகக் கூறியிருந்தார்.

அதன்படி இயக்குநர் ஏ.எல்.விஜயிடம் உதவி இயக்குநராக இருந்த விக்டர் என்பவரை இயக்குநராக்கி ‘விநோதன்’ என்னும் படத்தைத் தயாரிக்கிறார்.இப்படத்தில் ஐசரி வேலனின் பேரனும் ஐசரி கணேஷின் மகனுமான வருண் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கிறார்.

#TamilSchoolmychoice

அடுத்து இயக்குநர் ஏ.எல்.விஜய்யுடன் இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்கிறார். இதைப் பிரபல இயக்குநர் பிரியதர்ஷன்  இயக்குகிறார். இப்படத்தில் பிரகாஷ்ராஜ் , ஸ்ரேயா ரெட்டி இணைந்து நடிக்கிறார்கள்.இது எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றிய படமாகும்.

அடுத்ததாக,’ரோமியோ ஜூலியட்’ என்ற வெற்றிப் படத்தை இயக்கிய லட்சுமண் இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்கிறார். இப்படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்திற்கான தலைப்பு மற்றும் மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியாகும்.