கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 – இன்று கோலாலம்பூரில் தொடங்கிய 48வது ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் உச்சநிலைத் தலைவர்களின் மாநாட்டில் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறும்.
10 நாடுகளைக் கொண்ட ஆசியான் அமைப்போடு சீனா, இந்தியா, தென் கொரியா, வட கொரியா, ஜப்பான், கனடா, ரஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் பங்காளித்துவ கலந்துரையாடல் நாடுகளாக இணைந்துள்ளன.
ஆசியான் வெளியுறவு அமைச்சர்களின் தொடக்கவிழாவில் கலந்து கொள்ள வருகை தரும் பிரதமர் நஜிப்..
ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் குழுவாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டபோது…
படம்: EPA