Home நாடு மாடல் அழகி பெர்சானாவின் பிணை ரத்தாகும் அபாயம்

மாடல் அழகி பெர்சானாவின் பிணை ரத்தாகும் அபாயம்

512
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 30 – பொது இடத்தில் தனது மேலாடையைக் களைந்து அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மாடல் அழகி பெர்சானாவின் பிணை ரத்தாகும் சூழ்நிலை நிலவுகிறது.

Woman-strips-refusing-to-payஅவர் வெள்ளிக்கிழமை இரவுக்குள் ஈப்போவில் உள்ள பஹாகியா மருத்துவமனையில் முன்னிலையாக வேண்டும் என மாஜிஸ்திரேட் நூர் அமினாதுல் மார்டியா உத்தரவிட்டிருந்தார். அவ்வாறு முன்னிலையாகவில்லை எனில் பெர்சானாவின் பிணை ரத்து செய்யப்படும் என்றும், அவருக்கெதிராக கைது ஆணை பிறப்பிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் ஈப்போவுக்கு ரயிலில் செல்ல காத்திருப்பதாக பெர்சானாவின் சகோதரர் பீட்டர் வெள்ளிக்கிழமை மாலை கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் நீதிமன்றம் குறித்திருந்த காலக்கெடுவுக்குள் மருத்துவமனையைச் சென்றடைந்தாரா என்பது குறித்து தகவல் ஏதுமில்லை.

#TamilSchoolmychoice

முன்னதாக, குற்றவியல் சட்டப்பிரிவு 342ன் கீழ் பெர்சானாவுக்கு மருத்துவமனையில் ஒருமாத காலம் மனோத்துவ மதிப்பாய்வு (psychiatric evaluation) செய்யப்பட வேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்தார். இதன் பின்னர் ஜூலை 2ஆம் தேதி அன்று மனோத்துவ மதிப்பாய்வறிக்கையை நீதிமன்றம் ஆய்வு செய்யும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஜாலான் டூத்தா நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டிய பெர்சானா, கடைசி வரை வந்து சேரவில்லை.
முன்னாள் மாடல் அழகியான அவர், கடந்த ஏப்ரல் மாதம் பெட்டாலிங் சாலையில் உள்ள உணவகத்தில் 18 ரிங்கிட் பில் தொகையை செலுத்த மறுத்து, தனது மேலாடையைக் களைந்து அநாகரிகச் செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான காணொளி காட்சி சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவியதையடுத்து ஏப்ரல் 25ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.