Home Featured நாடு கார் பந்தய நிகழ்ச்சி: 3 நாட்களுக்கு நகரின் முக்கியச் சாலைகள் மூடப்படுகின்றன!

கார் பந்தய நிகழ்ச்சி: 3 நாட்களுக்கு நகரின் முக்கியச் சாலைகள் மூடப்படுகின்றன!

529
0
SHARE
Ad

1502-v05-with-logo-crop-u4065கோலாலம்பூர், ஆகஸ்ட் 5 – கோலாலம்பூரில் நடைபெறவுள்ள ‘கேஎல் சிட்டி கிராண்ட் ஃப்ரீ’ என்ற கார் பந்தய நிகழ்ச்சியை முன்னிட்டு, வரும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நகரின் முக்கியச் சாலைகள் மூடப்படுகின்றன.

வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரையில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஜாலான் அம்பாங், ஜாலான் சுல்தான் இஸ்மாயில், ஜாலான் ராஜா சோழன், ஜாலான் பேராக் மற்றும் ஜாலான் பி.ரம்லி ஆகிய சாலைகள் காலை 7.30 மணி முதல் மாலை 6 மணி வரையில் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் படி, நகர் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கின் தலைமை மூத்த துணை ஆணையர் டத்தோ வான் அப்துல் பாரி வான் அப்துல் காலிட் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

எனினும், அந்த சாலைகளின் அருகே அமைந்துள்ள நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் சிறப்பு அனுமதி பெறுவதன் மூலம் பயன்படுத்த முடியும் என்றும், கோலாலம்பூர் ஷங்கரி -லா தங்கும்விடுதியில் அதற்கான அனுமதிச் சீட்டுகளை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் வான் அப்துல் பாரி தெரிவித்துள்ளார்.