Home இந்தியா எதிர்க்கட்சிகளின்றி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட மசோதா நிறைவேற்றம்!

எதிர்க்கட்சிகளின்றி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட மசோதா நிறைவேற்றம்!

467
0
SHARE
Ad

0426vista4புதுடெல்லி, ஆகஸ்ட் 5- எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டும், நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்து வருவதாலும் நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் வன்கொடுமைத் திருத்த மசோதா நிறைவேறியது.

நாடாளுமன்றத்திற்குள் எதிர்ப்புப் பதாகைகளை ஏந்திக் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சபாநாயகர் அவர்களை 5 நாட்களுக்கு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். அதை எதிர்த்துக் காங்கிரஸ் கட்சியினர் நேற்று நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தனர். அவர்களுக்கு ஆதரவாக மற்ற எதிர்க்கட்சியினரும் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தனர்.

இதனால் நேற்று எதிர்க்கட்சியினர் இல்லாமல் ரயில்வே நிதி மசோதாவும் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

#TamilSchoolmychoice

இதில், தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தடுப்பு மசோதா நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருவதாகும்.

ஆகையால் நேற்று இந்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விவாதத்தைச் சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல்துறை ராஜாங்க அமைச்சர் தாவர்சந்த் கெலாட் தொடங்கி வைத்தார்.

‘‘தலித் இனத்தினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டே போவதால் இதைத் தடுப்பதற்குக் கடுமையான சட்டம் தேவைப்படுகிறது. எனவே, சட்டத்தில் திருத்தம் தேவை” என அவர் வலியுறுத்தினார்.

அவரைத் தொடர்ந்து உறுப்பினர்கள் பலரும் வன்கொடுமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினர்.

விவாதத்திற்குப் பின்னர் வன்கொடுமைச் சட்டத் திருத்த மசோதா குரல் ஓட்டின் மூலம் நிறைவேறியது.