Home இந்தியா இந்திய ரூபாய்த் தாள் அச்சடிப்பில் குளறுபடி: 37 கோடி ரூபாய் வீண்! 

இந்திய ரூபாய்த் தாள் அச்சடிப்பில் குளறுபடி: 37 கோடி ரூபாய் வீண்! 

504
0
SHARE
Ad

Evening-Tamil-News-Paper_65764582158புதுடில்லி, ஆகஸ்ட் 5-  இந்திய ரூபாய்த் தாள்களை அச்சடித்ததில் தவறு நேர்ந்துள்ளதால் சுமார் 37 கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய்த் தாள்களைப் பயன்படுத்த முடியாது என ரிசர்வ் வங்கி சாதாரணமாக அறிவித்துச்  சாமானிய மக்கள் ஒவ்வொருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பொதுவாக, இந்திய நாட்டின் அதிகாரப்பூர்வச் செலாவணியான ரூபாய்த் தாள்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அச்சகங்களில் அச்சடிப்பட்டு, வங்கிகள் மூலமாக மக்களின் பயன்பாட்டிற்கு வருவது வழக்கம்.

அனைத்து ரூபாய்த் தாள்களிலும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் கையொப்பம் இடம் பெறும். அவரது கையொப்பம் இடம் பெற்ற ரூபாய்த்தாள்கள் மட்டுமே செல்லுபடியாகும்.

#TamilSchoolmychoice

கடந்த 2008 செப்டம்பர் முதல் 2013 செப்டம்பர் வரை 5 ஆண்டுகள் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர் சுப்பாராவ். அவரையடுத்துத் தற்போது  ரகுராம்ராஜன் என்பவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பதவி வகித்து வருகிறார்.

ஆளுநர் மாறி விட்டதைக் கவனத்தில் கொள்ளாமல், இந்திய ரூபாய்த் தாள்களை அச்சிட்டு வழங்கும் ‘பேங்க் நோட் பிரஸ்’ முந்தைய ஆளுநர் சுப்பாராவின் கையெழுத்துக்களோடு 37.2 கோடி மதிப்புள்ள ரூபாயை அச்சடித்துள்ளது.மேலும்,அந்த ரூபாய்களில் எண்களும் சீரின்றி அச்சடிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய குளறுபடிகளால் இந்திய அரசு நிறுவனமான பி.என்.பி.க்கு 36.69 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்தியாவின் தலைமைக் கணக்கு அலுவலகமான சி.ஏ.ஜி. தெரிவித்துள்ளது.