Home இந்தியா சேலம் மதுக்கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு : விற்பனையாளர் பலி!

சேலம் மதுக்கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு : விற்பனையாளர் பலி!

503
0
SHARE
Ad

pசேலம், ஆகஸ்ட் 5- சேலம் மாவட்டத்தில் நடந்த மதுவிற்கு எதிரான போராட்டத்தில் மதுக்கடை ஊழியர் ஒருவர் பலியானதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

சேலம் மாவட்டம் புதுப்பாளையம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வரும் செல்வம் என்பவர் நேற்றிரவு கடையைப் பூட்டிவிட்டு, கடையினுள் படுத்திருந்தார்.

அப்போது அங்கு வந்த போராட்டக்காரர்கள் கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் கடை தீப்பிடித்து எரிந்தது. உள்ளே இருந்த செல்வம் தப்பிக்க முடியாமல் தீயில் சிக்கிக் கதறினார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்ட பொதுமக்கள் உள்ளே சென்று மீட்பதற்குள் அவர் மயக்கமடைந்து விழுந்து விட்டார்.

#TamilSchoolmychoice

உடனே அவரை மீட்டு வாழப்பாடி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்ததால், அங்கிருந்து அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பிற்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.