Home Featured நாடு எம்எச்370 பயணிகளின் குடும்பத்தாருக்கு மாஸ் ஆழ்ந்த இரங்கல்!

எம்எச்370 பயணிகளின் குடும்பத்தாருக்கு மாஸ் ஆழ்ந்த இரங்கல்!

657
0
SHARE
Ad

MASகோலாலம்பூர், ஆகஸ்ட் 6 – ரியூனியன் தீவில் கண்டெடுக்கப்பட்ட விமான இறக்கையின் ஒரு பகுதி மாயமான எம்எச்370 விமானத்தின் பாகம் தான் என்பதை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் பயணிகளின் உறவினர்களுக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

இது குறித்து மலேசியா ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

“கடந்த ஜூலை 29-ம் தேதி ரியூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் பாகம் எம்எச்370 -ன் பாகம் தான் என்பது உறுதியாகியுள்ள செய்தி வெளியானதையடுத்து எம்எச்370 விமானப் பயணிகளின் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மலேசியா ஏர்லைன்ஸ் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.”

#TamilSchoolmychoice

“பிரஞ்சு அதிகாரிகளும், மலேசிய விசாரணைக் குழுவும், பிஆர்சி மற்றும் ஆஸ்திரேலிய போக்குவரத்துப் பாதுகாப்பு குழுவும் கூட்டாக இணைந்து நடத்திய விசாரணையில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். அதை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்துள்ளார்.”

“பயணிகளின் குடும்பத்தாருக்கும், விமானப் பணியாளர்களின் குடும்பத்தாருக்கும் இந்தத் தகவலையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் ஏற்கனவே தெரிவித்துவிட்டோம்”

“எம்எச்370 விமானம் மாயமானதைத் தேடுவதில் இது ஒரு மிகப் பெரிய முன்னேற்றமாக அமைந்துள்ளது. இன்னும் அதிகமான பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விரைவில் எம்எச்370 மர்மம் நீங்கும் என்று நம்புகின்றோம் மற்றும் எதிர்பார்க்கின்றோம். மேலும், இந்த பேரிடர் தொடர்பான விசாரணையில், அதிகாரிகளுக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளித்து, அதில் கண்டறியப்படும் புதிய தகவல்களை பயணிகளின் குடும்பத்தாருக்கு தெரிவித்து வருவோம்” இவ்வாறு மலேசியா ஏர்லைன்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.