Home Featured உலகம் “என் குழந்தைக்காக காத்திருக்கிறேன்” – மார்க் சக்கர்பெர்க் நெகிழ்ச்சி!

“என் குழந்தைக்காக காத்திருக்கிறேன்” – மார்க் சக்கர்பெர்க் நெகிழ்ச்சி!

648
0
SHARE
Ad

mark-pricillaகோலாலம்பூர், ஆகஸ்ட் 6 – மகிழ்ச்சியான தருணங்கள், மாறாத வடுக்கள் என அனைத்து விதமான உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளும் தளமாகி விட்டது பேஸ்புக். அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு, அதன் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தான் முழு முதற்காரணம் என்பது அனைவருக்கும் அறிந்த ஒன்று. இந்நிலையில், சக்கர்பெர்க்கும் தன் வாழ்வின் மிக மகிழ்ச்சியான தருணத்தை, கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

“நானும், பிரிசில்லாவும் ஒரு அற்புதமான செய்தியை பகிர்ந்து கொள்கிறோம். நாங்கள் பெண் குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்” என்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் வாழ்வின் அடுத்த அத்தியாயம் தொடங்கி உள்ளது. எங்கள் குழந்தையின் வருகைக்காக நானும், பிரிசில்லாவும் இந்த உலகை அற்புதமான இடமாக மாற்றுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். இதை குறிப்பிடுவதற்கு முன் நான், எங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். கடந்த சில வருடங்களாகவே குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சித்து வருகிறோம். ஆனால், ஏற்கனவே மூன்று முறை கருச்சிதைவுகள் நடந்துவிட்டன.”

#TamilSchoolmychoice

“எனினும், தற்போது எங்களுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது. உங்களுக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்ற செய்தி எத்தகைய உணர்வுகளை ஏற்படுத்தும்? அத்தகைய உணர்வுகளில் தான் நான் திளைத்துக் கொண்டிருக்கிறேன். பொதுவாக யாரும் கருச்சிதைவுகளை பற்றி பேசமாட்டார்கள். ஏன் என்றால், உங்களின் கவலைகளையும், வருத்தங்களையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய நபர் வெகு தொலைவில் இருக்கலாம். ஆனால் தற்போது தூரம் ஒரு பொருட்டல்ல என்பதை நாம் நிரூபித்து இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“தற்சமயம் சில்லாவின் உடல்நிலை நல்ல முறையில் இருக்கிறது. எங்கள் குழந்தையை பார்ப்பதற்காகவும், அவளை இந்த உலகிற்கு வரவேற்பதற்காகவும் நான் காத்திருக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.