Home Featured தமிழ் நாடு தமிழ்நாடு: புதிய வனத்துறை அமைச்சராக எம்.எஸ்.எம். ஆனந்தன் மீண்டும் நியமனம்

தமிழ்நாடு: புதிய வனத்துறை அமைச்சராக எம்.எஸ்.எம். ஆனந்தன் மீண்டும் நியமனம்

619
0
SHARE
Ad

jசென்னை, ஆக்ஸ்ட்6- அண்மையில் தமிழக அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜி அதிரடியாக நீக்கப்பட்டதையடுத்து, இன்று தமிழக அமைச்சரவையில் எம்.எஸ்.எம்.ஆனந்தன் மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டது. இதில் புதிய வனத்துறை அமைச்சராக எம்.எஸ்.எம். ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே வனத்துறை அமைச்சராகப் பதவி வகித்து, இடையில் பதவி இழப்பிற்கு உள்ளானவர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில்,அமைச்சரவை மாற்றத்தில் இவருக்கு மீண்டும் வனத்துறையை  ஒதுக்கியுள்ளார் ஜெயலலிதா.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று  ஆளுநர் மாளிகையில் வரும் 9-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆளுநர் ரோசய்யா அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.