புத்ராஜெயா, ஆகஸ்ட் 6 – இன்று புத்ராஜெயாவிலுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமையகத்திற்கு சென்ற எதிர்கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் அதற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
1எம்டிபி விவகாரத்தில் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மீதான விசாரணையில் எம்ஏசிசி பல நெருக்கடிகளுக்கு உள்ளானது.
கடந்த சில நாட்களில் முன், எம்ஏசிசி விசாரணை அதிகாரிகள், காவல்துறையால் திடீரெனக் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இன்று எதிர்கட்சித் தலைவர் டத்தோ வான் அசிசா வான் இஸ்மாயில் தலைமையில், ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங், பிகேஆர் உதவித் தலைவர்கள் ரபிசி ரம்லி, சம்சுல் இஸ்கண்டார், கெராக்கான் ஹராப்பான் பாரு தலைவர் முகமட் சாபு மற்றும் முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிம் ஆகியோர் எம்ஏசிசி-க்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டனர்.
எம்ஏசிசி வியூக தகவல்தொடர்பு இயக்குநர் ரோஹாய்சட் யாக்கோப் ஆதரவளித்த எதிர்கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
எம்ஏசிசி தனது கடமைகளை நேர்மையாகவும், ஒளிவுமறைவின்றியும் தொடர்ந்து செய்யும் என்றும் ரோஹாய்சட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
படம்: டத்தோ டாக்டர் வான் அசிசா பேஸ்புக்