வாஷிங்டன், ஆகஸ்ட்6- உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார்? யார்? என்கிற ஒரு புள்ளி விவரத்தை ஆய்வு செய்து, ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை பட்டியல் வெளியிட்டுள்ளது.
இதில் முதல் 10 இடங்களில் இந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், சல்மான் கான் மற்றும் அக்ஷய் குமார் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியலில் இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சனும் சல்மான்கானும் 7-ஆவது இடத்தில் இருக்கிறார்கள். இருவரும் சென்ற வருடம் தலா ரூ.213 கோடி சம்பளம் வாங்கியுள்ளனர்.
இந்தி நடிகர் அக்ஷய்குமார் 9-ஆவது இடத்தில் இருக்கிறார். இவர் சென்றவருடம் ரூ.207 கோடி சம்பாதித்திருக்கிறார். இந்தி நடிகர் ஷாருக்கான் 18-ஆவது இடத்தில் இருக்கிறார். இவர் கடந்த வருடம் வாங்கிய சம்பளம் சுமார் ரூ.166 கோடியாகும்.
இந்தப் பட்டியலில் ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டவ்னி ஜூனியர் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இவரின் சென்ற வருட சம்பளம் சுமார் ரூ.480 கோடி ஆகும். இரண்டாவது இடத்தில் ஜாக்கிசான் உள்ளார். இவரின் சம்பளம் சுமார் ரூ.300 கோடி ஆகும்.
இதேபோல், அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியல் இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியொரு பட்டியலை ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிக்கை வெளியிடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நடிகரின் ஆண்டு வருமானம் 213 கோடியா? சாமானியன் கேட்டால் நெஞ்சடைத்துப் போவான்!
நடிகர்களின் சம்பளத்தை வெளியிட்ட பத்திரிக்கை, அவர்கள் ஒழுங்காக வருமானவரி கட்டுகிறார்களா? எவ்வளவு வருமானவரி கட்டுகிறார்கள்? எந்தெந்த நடிகர் வருமான வரி ஏய்ப்புச் செய்கிறார் என்கிற புள்ளி விவரப் பட்டியலையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.