Home இந்தியா பிரதமர் மோடியைப் படம் பிடிக்க ஊடகங்களுக்கு மறுப்பு!

பிரதமர் மோடியைப் படம் பிடிக்க ஊடகங்களுக்கு மறுப்பு!

466
0
SHARE
Ad

modiசென்னை, ஆகஸ்ட் 7- மத்திய அரசு சார்பில் சென்னையில் நடைபெறும் கைத்தறி நெசவாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை சென்னைக்கு வந்த பிரதமர் மோடியைத்  தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆளுநர் ரோசய்யா மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் நேரில் சென்று அரசு மரியாதையுடன் வரவேற்றனர்.

முக்கிய நிகழ்ச்சிகள் நடை பெற்றாலோ, முக்கிய தலைவர்கள் வருகை புரிந்தாலோ அதுகுறித்த செய்திகளைச் சேகரிப்பதற்குப் பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதியளிப்பது வழக்கம்.

அவ்வகையில், பிரமரின் சென்னை வருகையின் போது, விமான நிலையத்திற்குள் சென்று பிரதமரைப் படம் பிடிப்பதற்குச் சிறப்பு அடையாள அட்டை வழங்கப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

இதற்காகப் பத்திரிக்கையாளர்கள் ஜெயலலிதா மற்றும் ஆளுநர் ஆகியோர் செல்லும் வாயில் எண் 5 -ல் கூடியிருந்தனர்.

ஆனால், பிரதமர் மோடி வந்ததும், பத்திரிக்கையாளர்கள் யாருக்கும் உள்ளே செல்லவோ, பிரதமரைப் படம் பிடிக்கவோ அனுமதியில்லை எனத் தமிழகக் காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.

இதனால், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.