Home உலகம் தைவானை தாக்கியது சூறாவளி – 4 பேர் பலி!

தைவானை தாக்கியது சூறாவளி – 4 பேர் பலி!

702
0
SHARE
Ad

typhoon-soudelorதைப்பே, ஆகஸ்ட் 8 – தைவானை தாக்கி இருக்கும் ‘சௌடெல்லார்’ (Soudelor) சூறாவளி, அங்கு பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் மத்திய பகுதிக்கு புயல் கரையை கடக்கும் முன் தைவானில் பலமான சேதாரத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, அங்கு ஏற்பட்ட தொடர் மழையில் சிக்கி இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர்.

taiwan4இன்று காலை, தைவானின் மத்தியப் பகுதியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய சூறாவளி, விரைவில் சீனாவின் புஜியான் மாகாணத்தில் நிலை கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அதுவரை தைவான் மக்கள் பெரும் தாக்கத்தை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதால்,  கிழக்குப் பகுதிகளில் இருந்து 158,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

taiwan2கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழையும், சூறாவளியும் தைவானில் நிலை கொண்டு இருப்பதால், பெரும்பாலான உள்நாட்டு-வெளிநாட்டு விமான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டுள்ளன. ரயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

taiwanமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தைவான் அரசு, 35,000 மீட்புக் குழுவினரை தயார் நிலையில் வைத்துள்ளது. மேலும், 45,000 பேர் தங்கக் கூடிய அளவில் 100 முகாம்களை அமைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் அளித்துள்ளது.