Home கலை உலகம் “எனக்கும் கல்லூரியில் காதல் இருந்தது; பழசையெல்லாம் மறந்து விட்டேன்”-ஐஸ்வர்யாராய்!

“எனக்கும் கல்லூரியில் காதல் இருந்தது; பழசையெல்லாம் மறந்து விட்டேன்”-ஐஸ்வர்யாராய்!

785
0
SHARE
Ad

ash-new-382மும்பை, ஆகஸ்ட் 8- “கல்லூரிக் காலத்தில் எனக்கும் காதல் இருந்தது; ஆனால், பழைய வாழ்க்கையைத் திரும்பி பார்க்காமல் இருப்பதுதான் நல்லது” என்று முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராய் கூறியிருக்கிறார்.

எத்தனையோ உலக அழகிகள் வந்துவிட்டனர். உலக அழகிப் பட்டம் வாங்கிய பலர் படவுலகில் பிரகாசிக்க முடியாமல் அறுந்த பட்டம் போல் திசை தெரியாமல் பறந்து போய்விட்டனர்.

எத்தனை உலக அழகிகள் வந்தாலும் போனாலும், உலக அழகி என்றால் அது ஐஸ்வர்யாராய் மட்டும் தான்.அவருக்கு இப்போது 43 வயதாகிறது; 5 வயதில் ஒரு  மகள் இருக்கிறாள்.

#TamilSchoolmychoice

ஆனாலும், இளமை மாறாமல்- உடல் கட்டுக் குலையாமல் இருக்கிறார்.

மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவரிடம், “இந்த வயதிலும் அழகாக இருக்கிறீர்களே…அதன் ரகசியம் என்ன? சொல்லுங்கள்” என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

“எனது அழகிற்கான ரகசியம் எதை நினைத்தும் வருத்தப்படாமல் இருப்பது தான்; மனதை அமைதியாக வைத்திருப்பது தான்! வாழ்க்கையில் ஆயிரம் விசயங்கள் நடக்கும்; அதை அப்போதே மறந்து விடுவது தான் உடலுக்கும் மனசுக்கும் நல்லது!

என் கடந்த கால வாழ்க்கையில் நிறைய விசயங்கள் நடந்திருக்கின்றன. இப்போது அவற்றில் இருந்து முழுவதுமாக விடுபட்டு விட்டேன். பழைய விசயங்களை நினைப்பதில்லை.

எல்லோருக்கும் காதல் வரும்.எனக்கும் கல்லூரி வாழ்க்கையிலேயே காதல் வந்தது. ஆனால் அதையெல்லாம் கடந்து வந்துவிட்டேன்.கடந்து வந்த பிறகு திரும்பி பார்க்கக் கூடாது; நினைக்கவும் கூடாது. அதுதான் வாழ்க்கைக்கு நல்லது.

நான் இப்போது திருமணம் ஆனவள். என் குடும்பத்தின் கெளரவத்தையும் மரபையும் கட்டிக்காக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதில் இருந்து எப்போதும் நழுவ மாட்டேன்” என்றார்.

திருமணத்திற்கு முன் ஐஸ்வர்யாராய் சல்மான்கான் உட்பட பலருடன் கிசுகிசுக்கப்பட்டவர். அதனால் வேதனைகளுக்கும் ஆளானவர்.

அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்த பிறகு நடிப்பதைக் குறைத்துக் கொண்டு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.