கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர்களான டத்தோ பஹ்ரி மொஹமட் சின் மற்றும் டத்தோ ரோஹைசட் யாக்கோப் ஆகிய இருவரும் பிரதமர் துறையின் கீழ் மாற்றம் செய்யப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையரும், அரசாங்கத்தின் தலைமை செயலாளர் டான்ஸ்ரீ அலி ஹம்சா மற்றும் பொதுச்சேவைத்துறையின் பொது இயக்குநர் டான்ஸ்ரீ சாபிடி சைனலும் இன்று காலை புத்ராஜெயாவில் சந்தித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக எம்ஏசிசி தகவல் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சார்பில் அதன் துணைத் தலைமை ஆணையர் டத்தோ முஸ்தாபர் அலி (படம்) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அந்த இரண்டு உயர் அதிகாரிகளையும் பிரதமர் துறையின் கீழ் இடமாற்ற செய்வதை ரத்து செய்த டான்ஸ்ரீ டாக்டர் அலி ஹம்சாவின் முடிவை எம்ஏசிசி வரவேற்கிறது. அது ஒரு மிகச் சரியான முடிவு” என்று தெரிவித்துள்ளார்.