Home இந்தியா மோடி வருகை எதிரொலி:காதித் துணிகள் விற்பனைத் தூதராக அமிதாப் நியமனம்

மோடி வருகை எதிரொலி:காதித் துணிகள் விற்பனைத் தூதராக அமிதாப் நியமனம்

523
0
SHARE
Ad

amitab_2393109fபுதுடில்லி, ஆகஸ்ட் 10- கடந்த 7-ஆம் தேதி சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடந்த தேசியக் கைத்தறித் தின விழாவில் மோடி கலந்து கொண்டு பேசிய பிறகு, காதித் துணிகளின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், காதி மேம்பாட்டுத் தூதுவராக நடிகர் அமிதாப் பச்சனை நியமிக்க உள்ளதாகவும் காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் தெரிவித்துள்ளது.

கைத்தறித் தின விழாவில் பேசும் போது பிரதமர் மோடி,காதித் துணிகளை திரையுலகத்தைச் சேர்ந்த நட்சத்திரங்கள் விளம்பரப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

சில மாதங்களுக்கு முன்பு வானொலியில் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும் போது, ‘துணிகள் உட்பட காதிப் பொருட்களைப் பயன்படுத்துங்கள். அதனால் கிராமப்புறப் ஏழைகள் பலன் பெறுவார்கள்’ என்று நாட்டு மக்களுக்குக் கோரிக்கை வைத்தார். சென்னை நிகழ்ச்சியில் பேசும் போதும் இத்தகைய கோரிக்கையை வைத்தார்.

#TamilSchoolmychoice

மோடி இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்று இவ்வாறு பேசிய பின்பு, காதி அங்காடிகளில் விற்பனை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் காதியின் மேம்பாட்டுத் தூதுவராகச் சம்பளமின்றிப் பணியாற்ற பிரபல நடிகர் அமிதாப் பச்சன்  ஒப்புதல் அளித்துள்ளார்.

தற்போது நுகர்வோருக்கு ஏற்ற வகையில் மேலும் பல புதிய வடிவமைப்புகளைச் சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளதாகவும், இளைஞர்களைக் கவரும் வகையில் காதி ஜீன்ஸ், டி ஷர்ட்டுகள், ஜாக்கெட்டுகள் போன்றவற்றை அறிமுகம் செய்துள்ளதாகவும் காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அருண் குமார் ஜா தெரிவித்துள்ளார்.