Home Featured நாடு 2009 மத்திய செயலவைக்குத் திரும்பிய பழனியின் தீவிர ஆதரவாளர்கள்!

2009 மத்திய செயலவைக்குத் திரும்பிய பழனியின் தீவிர ஆதரவாளர்கள்!

639
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று திங்கட்கிழமை மாலை மஇகா இடைக்காலத் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற மஇகா 2009 மத்திய செயலவையின் கூட்டத்தில் டத்தோஸ்ரீ பழனிவேலுவின் தலைமையின் கீழ் இதுவரை இயங்கி வந்த இரண்டு மத்திய செயலவை உறுப்பினர்கள் மீண்டும் 2009 மத்திய செயலவைக்குத் திரும்பினர்.

MIC-CWC-10 Aug-Palaniappan-Randhirபழனிவேலுவின் முன்னாள் அரசியல் செயலாளரும் மஇகா செலாயாங் தொகுதியின் தலைவருமான டத்தோ பழனியப்பன், ஜோகூர் மாநிலத்தின் பொருளாளர் டத்தோ ரண்டீர் சிங் ஆகிய இருவரும் நேற்றைய மத்திய செயலவைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.