Home கலை உலகம் சினேகா-பிரசன்னா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது!

சினேகா-பிரசன்னா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது!

908
0
SHARE
Ad

sneha1சென்னை, ஆகஸ்ட் 11 – காதல் திருமணம் செய்து கொண்ட நடிகர் பிரசன்னா-சினேகா தம்பதிக்கு நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் பிரசன்னா உறுதிபடுத்தி உள்ளார்.

குழந்தை குறித்து பிரசன்னா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நேற்று இரவு என் வாழ்வின் விடியல் ஆரம்பமாகி உள்ளது. சினேகா, ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரசவத்திற்கு பிறகு தாயும், சேயும் நலமுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.