Home Featured நாடு இடமாற்ற உத்தரவு ரத்து: கருத்து தெரிவிக்க மறுத்த எம்ஏசிசி அதிகாரிகள்

இடமாற்ற உத்தரவு ரத்து: கருத்து தெரிவிக்க மறுத்த எம்ஏசிசி அதிகாரிகள்

461
0
SHARE
Ad

MACCபுத்ராஜெயா, ஆகஸ்ட் 11 – தங்களை பிரதமர் துறைக்கு இடமாற்றம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர்கள் இருவரும் இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

நேற்று திங்கட்கிழமை ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் காத்திருந்த செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, “எங்களது மேலதிகாரியை (பாஸ்) கேளுங்கள். அவர் பணிக்கு திரும்பியுள்ளார்” என்று ஆணைய இயக்குநர் டத்தோ பாஹ்ரி முகமட் சின் கூறினார்.

அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த அவர், அங்கு தயாராக காத்திருந்த வாகனத்தில் ஏறிச் சென்றார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே அதிகாரப்பூர்வ பயணமாக நியூயார்க் சென்றிருந்த ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணை தலைமை இயக்குநர் (நடவடிக்கை) டத்தோஸ்ரீ முகமட் சுக்ரி அப்துல் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நாடு திரும்பியுள்ளார்.

பாஹ்ரியுடன் பிரதமர் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட இருந்த ஊழல் தடுப்பு ஆணையத்தின் வியூகத் தொடர்பு இயக்குநர் டத்தோ ரோஹைசாட் யாக்கோப் செய்தியாளர்களை சந்தித்தபோது புன்னகையுடன் காணப்பட்டார்.. எனினும் தாம் மீண்டும் ஊழல் தடுப்பு ஆணைய பொறுப்பிலேயே நியமிக்கப்பட்டிருப்பது குறித்து அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.