Home இந்தியா ஐதராபாத்தில் அப்துல்கலாம் வெண்கலச் சிலை: இமராத் ஆராய்ச்சி மையம் திறந்தது!

ஐதராபாத்தில் அப்துல்கலாம் வெண்கலச் சிலை: இமராத் ஆராய்ச்சி மையம் திறந்தது!

687
0
SHARE
Ad

apஐதராபாத், ஆகஸ்ட் 11-ஐதராபாத்தில், மறைந்த முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வெண்கலச் சிலையை இமராத் ஆராய்ச்சி மையம் திறந்து வைத்தது.

இமராத் ஆராய்ச்சி மையம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஓர் அங்கமாகும். இந்த ஆராய்ச்சி மையம் அப்துல் கலாம் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டதாகும்.

இந்த ஆராய்ச்சி மையத்தைத் தோற்றுவித்த அப்துல் கலாம் அங்குள்ள ஆசிரியர்கள் குடியிருப்பில் சில ஆண்டுகள் தங்கியிருந்தார். அவர் தங்கியிருந்த ஆசிரியர்கள் குடியிருப்புக்கு அருகிலேயே அவரது சிலை தற்போது நிறுவப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

நேற்று அப்துல் கலாமின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. ராணுவ அமைச்சரின் அறிவியல் ஆலோசகரான ஜி.சதீஷ் ரெட்டி அவர்கள் சிலையைத் திறந்து வைத்து, அப்துல் கலாமின் அருமை பெருமைகள் பற்றிப் பேசினார்.

‘நிதி ஆயோக்’ உறுப்பினர் வி.கே.சரஸ்வத், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இயக்குநர் சதீஷ் குமார் மற்றும் இமராத் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள், அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டு அப்துல் கலாமின் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.

இது ஆந்திரா  மற்றும் தெலுங்கானா மக்கள், அப்துல் கலாமிற்குச் செலுத்தும் நன்றிக்கடனாகும்.