Home Featured கலையுலகம் பிகே பட இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி விபத்தில் சிக்கினார்!

பிகே பட இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி விபத்தில் சிக்கினார்!

524
0
SHARE
Ad

amirபுதுடெல்லி, ஆகஸ்ட் 11 – பிரபல இந்திப் பட இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி இன்று காலை ஏற்பட்ட விபத்தில், பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியில், முன்னாபாய்எம்பிபிஎஸ், த்ரிஇடியட்ஸ், அமீர்கான் நடிப்பில் வெளியான பிகே உட்பட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் ராஜ்குமார் ஹிராணி.

இன்று காலையில் அவர் மோட்டார் பைக்கில் செல்லும் போது விபத்து ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மும்பையிலுள்ள லீலாவதி மருத்துவமனையில் தற்போது அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், அபாயக்கட்டத்தைத் தாண்டி விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

#TamilSchoolmychoice