Home Featured கலையுலகம் ராகாவில் சாதனையாளர் நிகழ்ச்சி – 40 சாதனையாளர்களுக்கு விருது!

ராகாவில் சாதனையாளர் நிகழ்ச்சி – 40 சாதனையாளர்களுக்கு விருது!

662
0
SHARE
Ad

unnamed (4)கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 – பல தரப்பட்ட துறையில் உலகளவில்  சாதனைப் புரிந்தவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் ஒரு நோக்கத்திற்காக மலேசியாவின் முதன்மை நிலை தமிழ் வானொலி டி.எச்.ஆர் ராகா ‘ராகாவில் சாதனையாளர்’ எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து 40 சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கெளரவித்தது.

unnamed (3)

கடந்த சனிக்கிழமை, தலைநகரிலுள்ள ரமடா விடுதியில் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் கல்வி, இசை, மருத்துவம், காப்புறுதித் திட்டம், தொழில் நுட்பம், நடனம், வர்த்தகம், கடல், சமூகச் சேவை, மொழியல் போன்ற பல துறையில் சாதனைப் படைத்தவர்களுக்கு டி.எச்.ஆர் ராகாவின் தலைவர் சுப்பிரமணியம் வீராசாமி விருதுகளை எடுத்து வழங்கினார்.

#TamilSchoolmychoice

unnamed (2)

“‘பல சாதனையாளர்கள் தங்களுடைய வெற்றியை நாடுதாளுவிய நிலையில் பகிர்ந்து கொள்ள டி.எச்.ஆர் ராகா அகப்பக்கத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருத்தார்கள். அவற்றுள் இறுதியில் 40 சாதனையாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்”, என்று சுப்ரா கூறினார்.

unnamed (5)

அதை வேளையில் இந்த 40 சாதனையாளர்களின் நேர்காணலும் ராகாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிறகு, அவர்களுக்கு ‘ராகாவில் சாதனையாளர்’ நிகழ்ச்சியில் வாயிலாக அங்கீகாரமும் வழங்கப்பட்டது.

THR

டி.எச்.ஆர் ராகாவின் அறிவிப்பாளர்கள் ஆனந்தா, உதயா, ராம், சுரேஷ், கவிமாறன், ஜெய், கீதா, அகிலா, ஷாலு, யாஷினி ஆகியோர் நிகழ்ச்சியைச் சிறப்பாக வழிநடத்தினர்.

கீழ்காணும் பட்டியல் ‘ராகாவில் சாதனையாளர்’

எண் சாதனையாளர் பெயர் துறை
1 தேவேந்திரன் கோவிந்தசாமி விளையாட்டு
2 டாக்டர் கேசவன் கோபாலு சமூக சேவை
3 மோகன் சின்னயா சமூக சேவை
4 ராஜகோபால் சமூக சேவை
5 மார்கேட் சின்னப்பன் கல்வி
6 டர்ஷன் ரமேஷ் ஓவியம் மற்றும் போலிங்
7 செல்வி காத்தன் வர்த்தகம்
8 சாலினி ஜெயபிரகாஷ் சமூக சேவை
9 கவிஷ்குமார் மணிமாறன் விளையாட்டு
10 மாதவன் சங்கரன் சமூக சேவை
11 கலைச்செல்வம் சுப்ரமணியம்
12 கிருஷ்ணமூர்த்தி சந்திரன்
13 வாசன் அங்காலன் கலை & பொழுது போக்கு
14 அமரர் ஜேக்கப் பொன்னையா விளையாட்டு
15 லியானா ஜேக்ஸன் கல்வி
16 விமலா முனியாண்டி கல்வி
17 டனேஷ் சந்தர் சிலம்பம்
18 டாக்டர் ஸ்ரீவள்ளியம்மா நாராயணசாமி மருத்துவம்
19 ஹஷ்மிதா செல்வம் இசை
20 அலெக்ஸாண்டர் அந்தோணி வர்த்தகம்
21 மேரி கிறிஸ்டினா வேதமூத்து
22 நவனேஷா பரமேஸ்வரன் விளையாட்டு
23 வனசுந்தரி கோவிந்தசாமி காப்புறுதித் திட்டம்
24 கணேசன் பாலன்
25 கார்த்திகா கந்தசாமி இசை
26 சரவணன் பன்னீர் செல்வம் ஊடகவியல்
27 டைப் அரிப்பின் அபு தாஹிர் சமூக சேவை
28 ரமேஷ் பெருமாள் வர்த்தகம்
29 ஜெகதீஸ் குணபாலன் விளையாட்டு
30 ஷீலா சாமிவேலு
31 யுவராஜன் பாஸ்கரன் பொறியல்
32 சுரேஷ் ரோகன் இசை
33 மோகனசுந்தர் செல்வராஜூ விளையாட்டு
34 கண்ணன் உசிலப்பன் உணவகம்
35 நாகேஸ்வரி அவேலியர் கல்வி
36 சுப்ரமணியம் முத்தையா சமூக சேவை
37 இந்திரா மணிக்கம் கலை
38 கனகாராஜூ மேகன் சமூக சேவை
39 லோகனேஷ் சிவபாலன் தகவல் தொழில் நுட்பவியல்
40 லெட்சுமணன் சண்முகம் சுற்றுலா