Home கலை உலகம் படத் தயாரிப்பில் பல கோடி நட்டம்: யோகா ஆசிரியை ஆனார் பூமிகா!

படத் தயாரிப்பில் பல கோடி நட்டம்: யோகா ஆசிரியை ஆனார் பூமிகா!

690
0
SHARE
Ad

poஐதராபாத், ஆகஸ்ட் 11- தனது பெரிய உதடுகளால், வசீகரப் புன்னகையால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை பூமிகா. தமிழில் விஜய்யுடன் ‘பத்ரி, ஸ்ரீகாந்துடன் ரோஜாக்கூட்டம், சூர்யாவுடன் ‘சில்லுனு ஒரு காதல்’ போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானவர் பூமிகா.

தமிழை விட தெலுங்கில் அதிகப் படங்கள் நடித்துப் புகழ் பெற்றார்; குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாகவும் உயர்ந்தார். அவரது வியாபார மதிப்பு உயர்ந்து இந்திப் படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.

பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் போதே, யாரும் எதிர்பாராமல் திடீரென யோகா மாஸ்டர் பரத் தாகூரைத் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு அவருக்கு இறங்கு முகமானது.

#TamilSchoolmychoice

கல்யாணம் செய்து கொண்ட கதாநாயகிகளைத் தென்னிந்திய ரசிகர்கள் அதன்பின்பு கதாநாயகியாக ஏற்றுக் கொள்வதில்லை என்பதைக் கொள்கை முடிவாகவே வைத்திருக்கிறார்கள் என்பதைப் பூமிகா மறந்துவிட்டார் போலிருக்கிறது.

முன்பு போல் படவாய்ப்புகள் அமையாததால், அதுவரை சம்பாதித்து வைத்திருந்த பணத்தை எல்லாம் போட்டுப் படத்தயாரிப்பில் இறங்கினார். அவர் தயாரித்த படம் எதுவும் ஓடவில்லை; பல கோடிகள் நட்டமானதுதான் மிச்சம்.

தயாரிப்பாளரான பிறகு, உள்ள வாய்ப்பும் பறிபோனது. பல காலங்கள் காத்திருந்து பார்த்தார். ஒரு வாய்ப்பும் வந்து கதவைத் தட்டவில்லை.

அதனால், கணவருடன் துபாய்க்கு மூட்டை கட்டிப் போய்விட்டார். அங்கே கணவருடன் சேர்ந்து யோகா கற்றுக்கொடுக்கும் பள்ளி நடத்தி வருகிறாராம்.

யோகா கற்றுக் கொடுக்க துபாய்க்கு ஏன் போக வேண்டும்? பூமிகா யோகா ஆசிரியை என்றால், இந்தியாவிலேயே பல பேர் ஆர்வத்தோடு வந்து குவிவார்களே?

அதற்கும் அனுஷ்கா போட்டிக்கு வந்துவிடுவார் என்கிற பயமோ?

.