Home கலை உலகம் சிம்புவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

சிம்புவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

520
0
SHARE
Ad

NT_140504111915000000சென்னை, ஆகஸ்ட் 12- ஒரு வழியாய் பிரச்சினை தீர்ந்து வாலு படம் வெளியாவது உறுதியாகியுள்ள நிலையில், சிம்புவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

வாலு படத்தின் பிரச்சினை மூன்றாண்டு காலமாக ஒரு முடிவுக்கு வராமல், அனுமார் வால் மாதிரியே நீண்டு கொண்டே போனது.

தயாரிப்பாளருக்குப் பணப் பிரச்சினை, சிம்பு- இயக்குநர் மோதல் பிரச்சினை, சிம்பு- ஹன்சிகா காதல் பிரச்சினை, பின்பு ஹன்சிகாவின் கால்ஷீட் பிரச்சினை, விநியோகஸ்தர் பிரச்சினை என்று பிரச்சினைக்கு மேல் பிரச்சினை ஏற்பட்டு, கடைசியில் விஜய்யின் தலையீட்டால் பிரச்சினை ஓய்ந்து ஒரு வழியாக வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது.

#TamilSchoolmychoice

வாலு படம் உண்மையில் எப்படி இருக்கிறதோ தெரியவில்லை. இவ்வளவு பிரச்சினைகளுக்குப் பின்பு வெளி வருவதால், அந்தப் படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று ஒரு தடவை பார்க்கலாமே என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.

வாலு படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கண்டிப்பாக வெளியாகும் என்பது உறுதியானவுடன் சிம்புவுக்கு முதல் வாழ்த்துச் சொன்னவர் யார் தெரியுமா? ரஜினிகாந்த் தான்!

சிறுவனாக நடித்த போது ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ என்றும், இளைஞரான பின்பு ‘யங் சூப்பர் ஸ்டார்’ என்றும் சிம்பு பட்டம் சூட்டிக் கொண்டதால் ரஜினி ரசிகர்களுக்கு ஏனோ சிம்புவைப்  பிடிக்காமல் போய்விட்டது.

அதனால், ‘எல்லோரையும் வாழ்த்துவது தலைவர் வழக்கம். யாரை ஆதரிப்பது என்பதை நாம தீர்மானிச்சா போதும்,’ என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் ரசிகர்கள்!