Home இந்தியா ராஜீவ் கொலையாளிகள் விடுதலை எதிர்ப்பு: இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு!

ராஜீவ் கொலையாளிகள் விடுதலை எதிர்ப்பு: இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு!

516
0
SHARE
Ad

14072015_rajivபுதுடில்லி, ஆகஸ்ட் 12-  ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரின் விடுதலைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் இறுதி வாதம் முடிந்துள்ள நிலையில், வழக்கின்  தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பேரறிவாளன், முருகன்,சாந்தன்,நளினி உள்ளிட்ட ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரும், 23 வருடம் சிறையில் இருந்ததால் ஏழு பேரையும் விடுவிக்கத் தமிழக அரசு தீர்மானித்தது.

ஆனால் இந்தத் தீர்மானத்தை எதிர்த்து முந்தைய காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

#TamilSchoolmychoice

இவ்வழக்கை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு 4 வாரம் விசாரித்தது.

இவ்வழக்கின் இறுதி விசாரணை இன்று நடந்து முடிந்தது.ஆனால், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.