Home கலை உலகம் நடிகர் சங்கத் தேர்தலில் கருணாநிதிக்கு வாக்குரிமை பறிக்கப்பட்டது ஏன்?

நடிகர் சங்கத் தேர்தலில் கருணாநிதிக்கு வாக்குரிமை பறிக்கப்பட்டது ஏன்?

555
0
SHARE
Ad

500256015karunanithi111_28சென்னை, ஆகஸ்ட் 12- நடிகர் சங்கத்தின் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதிலிருந்து ஒரே சர்ச்சையாக இருக்கிறது.

நடிகர் சங்கத்தில் இதுவரை ஓட்டுப்போடும் உரிமையுள்ள ஆயுட்கால உறுப்பினராக இருந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயர் திடீரென நீக்கப்பட்டு,அவரது ஓட்டுரிமை பறிக்கப்பட்டுள்ளது.

2013-ஆம் ஆண்டு  தேர்தல் வரை கலைஞரின் பெயர் நடிகர் சங்கத்தின் வாக்காளர் பட்டியலில் இருந்திருக்கிறது. இப்போது தான் அதில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

திரைப்படங்களுக்குக் கருணாநிதி அதிகமாகக் கதை, வசனம் எழுதினாலும், ஆரம்ப காலத்தில் நாடகத்திலும் சினிமாவில் சிறு பாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.ஆகவே அவர் நடிகர் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினராக உள்ளார்.

ஆனால், கலைஞர் கருணாநிதி மாதா மாதம் முறையாகச் சந்தா கட்டவில்லையாம். அதனால், சந்தாவை முறையாகக் கட்டாத உறுப்பினர்கள் ஓட்டுப் போடும் தகுதியை இழக்கிறார்கள் என்கிற விதியின்படி அவருடைய ஓட்டுரிமை பறிக்கப்பட்டதாம்!

கலைஞர் வருடத்திற்கு ஒரு முறை சந்தா கட்டுவதாகவும், அதனால் அவர் பெயர் வருடாவருடம் சந்தா கட்டவேண்டியவர்கள் பட்டியலுக்கு மாற்றப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

ஆனால், அப்படி மாற்றிய தகவலை நடிகர் சங்க நிர்வாகிகள் அவருக்கு முறைப்படி தெரிவிக்கவில்லை.

இது திட்டமிட்டே செய்யப்பட சதி என்றும், கலைஞரை அவமானப்படுத்தும் நோக்கில் இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்றும் கலைஞரின் விசுவாசிகள் கொதித்துப் போயுள்ளனர்.

மூத்த உறுப்பினர், திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்குக் கொடுக்கும் திட்டம் உட்பட திரையுலகுக்காகப் பல சலுகைகளைச் செய்திருக்கிறார் கலைஞர். அப்படிப்பட்ட அவருக்கே இந்த நிலைமையா?

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி யாரும் இதற்குச் சரியான விளக்கம் கொடுக்க மறுக்கிறார்கள்.