Home இந்தியா சிலைத் திருட்டு: வீ.சேகரைக் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு!

சிலைத் திருட்டு: வீ.சேகரைக் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு!

450
0
SHARE
Ad

29-1419846440-v-sekar1-60சென்னை,ஆகஸ்ட் 13- சிலைத் திருட்டு மற்றும் சிலைக் கடத்தல் வழக்கில் கைதான பிரபல சினிமா இயக்குநர் வீ.சேகரை உண்மைகளைக் கண்டறிய வசதியாகக் காவலில் எடுத்து விசாரிக்கக் காவல்துறை முடிவெடுத்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதியிலுள்ள கோவில்களில் இருந்தும் சிலைகளைத் திருடிக் கொண்டு வந்து, சென்னையில் அவரது வீட்டில் வைத்து, ஆஸ்திரேலியா முதலான வெளிநாடுகளுக்குக் கப்பல் மூலம் கடத்திச் சென்று விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

மேலும், சிலைக் கடத்தல் பின்னணியில் வேறு சில சினிமா பிரபலங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்பது குறித்தும் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது.

#TamilSchoolmychoice

அவரிடமிருந்து முழு உண்மைகளையும் வர வைக்க வசதியாக அவரைக் காவலில் எடுத்து விசாரிக்கக் காவல்துறியினர்  முடிவு செய்துள்ளனர்.

அதற்கான நடவடிக்கையையும் தொடங்கியுள்ளனர்.