Home கலை உலகம் ரஜினியின் ‘ஜானி’ படம் மறுபதிப்பு: ஜீவன் நடிக்கிறார்!

ரஜினியின் ‘ஜானி’ படம் மறுபதிப்பு: ஜீவன் நடிக்கிறார்!

590
0
SHARE
Ad

221சென்னை, ஆகஸ்ட் 13- 1980ஆம் ஆண்டு மகேந்திரன் இயக்கத்தில், ரஜினிகாந்த்- ஸ்ரீதேவி நடிப்பில், இளையராஜாவின் இனிய இசையில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் ஜானி. இதில் ரஜினிகாந்த் இரு வேடங்களில் மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படத்தைத் தற்போது மறுபதிப்பு(remake) செய்ய நடிகர் ஜீவன் முயற்சித்து வருகிறார்.

இவர் காக்க காக்க, திருட்டுப் பயலே, நான் அவனில்லை முதலிய படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். இடையில் சில காலம் நடிக்காமல் சொந்த வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்து விட்டுத் தற்போது மீண்டும் ‘அதிபர்’ என்ற படத்தின் மூலம் மறுபிரவேசமாகிறார்.

#TamilSchoolmychoice

இதுகுறித்து அவர், “நான் ஏற்கனவே ஜெமினிகணேசனின் ‘நான் அவனில்லை’ படத்தின் மறுபதிப்பில் நடித்தேன். அந்தப் படம் வெற்றிகரமாக ஓடியது. அதேபோல், ரஜினிகாந்தின் ‘ஜானி’ படத்தையும் மறுபதிப்பு செய்து நடிக்க விரும்புகிறேன். அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு இருக்கிறேன்.அந்தப் படத்தை நானே தயாரித்து நடிப்பேன்” எனக் கூறியுள்ளார்.