Home இந்தியா இன்று பாகிஸ்தானின் சுதந்திர தினம்: இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!

இன்று பாகிஸ்தானின் சுதந்திர தினம்: இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!

584
0
SHARE
Ad

modi-1புதுடில்லி,ஆகஸ்ட் 14- பாகிஸ்தானிற்கு இன்று சுதந்திர தினமாகும். சுதந்திர தினவிழாவைக் கொண்டாடும்  பாகிஸ்தான் மக்களுக்கு இந்தியப் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் படைகள் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் ஐந்தாவது நாளாகத் தொடர்ந்து  தாக்குதல் நடத்தி வரும் சூழ்நிலையிலும், இந்தியப் படைகளின் கவனத்தைத் திசை திருப்பி, பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து நாளை இந்தியாவில் நடைபெறும் சுதந்திர தினத்தைச் சீர்குலைக்கப் பாகிஸ்தான் முயற்சு செய்து வரும் போதிலும், அந்நாட்டினர் மீது குரோதம் கொள்ளாமல், விரோதம் பாராட்டாமல் பரந்த மனப்பானமையோடு பிரதமர் மோடி, பாகிஸ்தான் மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.