Home Featured தமிழ் நாடு சென்னையில் வாலு படம் வெளியானது: சிம்பு படம் பார்க்கிறார்!

சென்னையில் வாலு படம் வெளியானது: சிம்பு படம் பார்க்கிறார்!

812
0
SHARE
Ad

Simbuசென்னை, ஆகஸ்ட் 14- ஒருவழியாய்ப் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து சிம்புவின் வாலு படம் திரைக்கு வந்துவிட்டது.

சென்னையிலுள்ள காசி திரையரங்கில் சிம்பு ரசிகர்களுக்காகக் காலை 4 மணிக்கும், 8 மணிக்கும் சிறப்புக் காட்சி திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக ரசிகர்களும் ஆவலாகக் காத்திருந்தனர். ஆனால்,திடீரென அந்த இரு காட்சிகளும் ரத்தாகிவிட்டன.

#TamilSchoolmychoice

அதனால், வாலு படம் இன்றாவது வெளியாகுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டது.

இந்நிலையில் 10 மணிக்குச் சிறப்புக் காட்சி நிச்சயம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அதை உறுதிப்படுத்தும் விதமாக வாலு படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்க்க இன்று காலை காசி திரையரங்கிற்கு நடிகர் சிம்புவும் ஜெய்யும் வந்தனர். அவர்களை ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

சிம்பு வந்த சில நிமிடங்களில் படம் தொடங்கியது. இளையதளபதி விஜய்க்கு நன்றி என்ற  தலைப்பு அட்டையுடன்( title card உடன்) படம் ஆரம்பிக்க, ரசிகர்களின் ஆர்ப்பாட்டத்தை ரசித்தபடி படம் பார்க்கிறார் சிம்பு.