Home இந்தியா ஜெயலலிதா நாளை தேசியக்கொடியேற்றி, கலாம் பெயரில் விருது வழங்குகிறார்

ஜெயலலிதா நாளை தேசியக்கொடியேற்றி, கலாம் பெயரில் விருது வழங்குகிறார்

612
0
SHARE
Ad

jசென்னை, ஆகஸ்ட் 14- சுதந்திர தின விழாவை முன்னிட்டு தலைமைச் செயலகம் அமைந்துள்ள ஜார்ஜ் கோட்டையில் நாளை காலை 8.50 மணியளவில் முதலமைச்சர் ஜெயலலிதா கொடியேற்றுகிறார்.

முதன் முறையாக அப்துல் கலாம் பெயரில் விருதும் வழங்குகிறார்.

சுதந்திர தின விழாவிற்காக ஜார்ஜ் கோட்டைக்கு வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை நுழைவாயில் இருந்து இரு சக்கர வாகனங்கள் புடைசூழ காவல்துறையினர் கோட்டைக்குள் அழைத்து வருவார்கள். திறந்த ஜீப்பில் காவல்துறை அணிவகுப்பைப் பார்வையிட்டபடி அவர் கோட்டை கொத்தளத்திற்கு வந்து சேருவார்.

#TamilSchoolmychoice

கோட்டைக் கொத்தளத்தின் முன்பாக அவருக்கு முப்படை அதிகாரிகள் மற்றும் தமிழகக் காவல்துறை அதிகாரிகளைத் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் அறிமுகம் செய்து வைப்பார்.

பின்பு அவர் சரியாக 8.50 மணிக்குத் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தி, சுதந்திர தின உரை நிகழ்த்துவார்.

அதைத் தொடர்ந்து, கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல் ஆளுமை விருது, தமிழக அரசு விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை ஜெயலலிதா வழங்க உள்ளார்.

இந்தச் சுதந்திர விழாவில் முதன்முறையாக மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ‘டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்பட உள்ளது.

இந்த வருட சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்காக ஒரு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

jayaஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் 25 படிக்கட்டுகள் ஏறிச் சென்று தான் தேசியக்கொடி ஏற்ற வேண்டும். ஆனால்,முதலமைச்சர் ஜெயலலலிதா இத்தனை படிக்கட்டுகள் ஏறிச் செல்வது சிரமம் என்பதால், தரையிலிருந்து பளு தூக்கி(லிஃப்ட் )மூலம் கொத்தளத்தின் மேல் பகுதிக்குச் சென்று கொடியேற்ற புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக விமான நிலையங்களில் பயன்படுத்தும் நவீன வகைப் பேருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. இந்தப்பேருந்தின் உள்ளே ஏறிச் சென்று பொத்தானை அழுத்தினால், அதிலுள்ள பளு தூக்கி மூலம் நேராகக் கோட்டைக் கொத்தளத்தின் மேல் பகுதிக்குச் சென்று கொடியேற்றலாம்.