Home கலை உலகம் இந்தியச் சுதந்திர தினம்: நாளை லண்டனில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி!

இந்தியச் சுதந்திர தினம்: நாளை லண்டனில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி!

668
0
SHARE
Ad

arசென்னை, ஆகஸ்ட் 14- லண்டனில் புகழ்பெற்ற அரங்கம் ஓ2-ல் நாளை ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.

இந்திய சுதந்திர தினத்தை உலகளாவிய அளவில் கொண்டாடும் விதத்தில் ஏ.ஆர். ரகுமான் இந்த இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்.

இதுபற்றிய தகவலை அவர் நேற்று தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“லண்டனில் உள்ள ரசிகர்களே! நண்பர்களே! உங்களை ஆகஸ்ட் 15 அன்று லண்டனில் உள்ள ஓ2 அரங்கில் சந்திக்க வருகிறேன்,” என டுவிட் செய்துள்ளார்.

இந்த இசை நிகழ்ச்சியில் தமிழ் மற்றும் இந்தித் திரைப்படப் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

மேலும், சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் இசை நிகழ்ச்சி என்பதால் கண்டிப்பாகத் தனது புகழ்பெற்ற வந்தே மாதரம் பாடலை ஏ.ஆர்,ரகுமான் இசைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமானுடன் நீத்தி மோகன், ஜாவத் அலி, கார்த்திக், ஹரிசரண், ஜொனிதா காந்தி, கட்டானி ஆகியோரும் பங்கேற்றுப் பாடவிருக்கிறார்கள்.