பாப்புவா நியுகினி – இன்று 54 பயணிகளுடன் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இந்தோனேசியாவின் டிரிகானா ஏர் விமானம் பாப்புவா நியுகினி நாட்டின் மேற்குப் பகுதியில் மிகவும் ஒதுக்குப்புறமான மலைப் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தேடுதல் குழுவினர் அறிவித்துள்ளனர்.
டிரிகானா ஏர் விமானம் நொறுங்கிய நிலையில் அந்தப் பகுதியில் உள்ள கிராமத்தினர் கண்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
54 பயணிகளுடன் உள்நாட்டு நேரம் பிற்பகல் 2.55க்கு பாப்புவா நியு கினி நாட்டின் தலைநகர் ஜெயபுராவில் இருந்து ஒக்சிபில் என்ற நகருக்கு அந்த விமானம் புறப்பட்டது. அதன் பின்னர் அந்த விமானம் கட்டுப்பாட்டு கோபுரத்துடன் தொடர்பை இழந்தது.
அந்த விமானம் தரையிறங்க வேண்டிய ஒக்சிபில் விமான நிலையத்திலிருந்து சற்று தொலைவில் பிந்தாங் மலைப்பகுதியில் அந்த விமானம் நொறுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இருள் சூழ்ந்த நேரமாகவும், மிகவும் ஒதுக்குப்புறமான பகுதியாகவும் இருப்பதால், பயணிகள் யாரும் உயிர் பிழைத்துள்ளனரா என்பதை இதுவரை அதிகாரிகள் உறுதிப்படுத்த இயலவில்லை.
ஏடிஆர் 42-300 (ATR42-300) ரக அந்த விமானத்தில் 44 பயணிகள், ஐந்து குழந்தைகள் மற்றும் 5 பணியாளர்கள் பயணம் செய்தனர்
(மேலும் செய்திகள் தொடரும்)