Home கலை உலகம் ரஜினியின் புதுப்படத் தலைப்பு ‘கபாலி’: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரஜினியின் புதுப்படத் தலைப்பு ‘கபாலி’: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

628
0
SHARE
Ad

rajinikanth2சென்னை, ஆகஸ்ட் 17- அட்டக்கத்தி பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘கபாலி’ என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைப் பா. ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

முதலில் இந்தப் படத்திற்குக் ‘காளி’ என்ற தலைப்பும், பின்பு ‘கண்ணபிரான்’ என்ற தலைப்பும் பரிசீலிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

காளி என்ற தலைப்பு வேண்டாம் எனக் கூறிவிட்டார் ரஜினி. கண்ணபிரான் என்ற தலைப்பும் சரிப்படவில்லை.

கடைசியில், இப்படத்தில் ரஜினி கதாபாத்திரத்தின் பெயர் ‘கபாலீஸ்வரன்’ என்பதால், அப்பெயரின் சுருக்கமாகக் ‘கபாலி’ என்று வைக்கலாம் என இயக்குநர் குழு யோசனை சொன்னது. ரஜினிக்கு இந்தத் தலைப்பு பிடித்திருந்தது.

அப்புறமென்ன? தலைப்பு உறுதியாகிவிட்டது.

விநாயகர் சதுர்த்தி அன்று படத்தின் முதல் பார்வை( first look) வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.