Home உலகம் பாங்காக்கில் குண்டு வெடிப்பு: 12 பேர் பலி; 20 பேர் படுகாயம்

பாங்காக்கில் குண்டு வெடிப்பு: 12 பேர் பலி; 20 பேர் படுகாயம்

1050
0
SHARE
Ad

bangkokபாங்காக், ஆகஸ்ட் 17- தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள வணிக வளாகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில்,12 பேர் உயிரிழந்தனர்; 20 பேருக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்தவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மத்திய பாங்காக்கின் சில்டாம் மாவட்டத்தில் மக்கள் அதிகமாகக் கூடும்  வணிக மையத்தில் இன்று திடீரெனப் பயங்கரச் சத்தத்துடன் குண்டு வெடித்துச் சிதறியதில் பலர் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறிச் செத்தனர்.

#TamilSchoolmychoice

இறந்தவர்களின் உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்த காட்சி பார்க்கவே கொடூரமாக இருந்தது.

பொருட்கள் எல்லாம் சிதறிச் சிதைந்து அலங்கோலமாய்க் கிடந்தன.

அங்கே நிறுதி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததால், அப்பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

மக்கள் அலறியபடி ஒவ்வொரு திசையில் சிதறி ஓடினர். காயமுற்றுக் கிடந்தவர்கள் மரண ஓலம் எழுப்பினர்.

தகவலறிந்து காவல்துறையினரும், மீட்புக்குழுவினரும் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குண்டுவெடிப்பு நடந்த வணிக வளாகத்திற்கு அருகில் புகழ் மிக்க கோவில் ஒன்று இருப்பதால், அதைக் குண்டு வைத்துத் தகர்க்க நடந்த முயற்சியா என்கிற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை இந்தத் தாக்குதலுக்கு எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.