Home Featured உலகம் பாங்காக் குண்டுவெடிப்பு – பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

பாங்காக் குண்டுவெடிப்பு – பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

672
0
SHARE
Ad

bangkok4பாங்காக், ஆகஸ்ட் 17 – பாங்காக் குண்டு வெடிப்பில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 78 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

bangkok3புகழ்பெற்ற சுற்றுலாத் தளத்தில் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளதால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பலியாகி உள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

bangkok1இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.