Home Featured நாடு அமெரிக்கத் தமிழ்ச் சங்கத் தலைவர் பிரகாஷ் எம்.சாமி, சரவணன், டி.மோகனோடு சந்திப்பு

அமெரிக்கத் தமிழ்ச் சங்கத் தலைவர் பிரகாஷ் எம்.சாமி, சரவணன், டி.மோகனோடு சந்திப்பு

890
0
SHARE
Ad

Saravanan-T.Mohan-Prakash Samy USAகோலாலம்பூர் – மலேசியாவுக்கு வருகை தந்திருக்கும் அமெரிக்க தமிழ்ச் சங்கத் தலைவர் பிரகாஷ் எம்.சாமி நேற்று மரியாதை நிமித்தம் துணையமைச்சரும், மஇகா தேசிய உதவித் தலைவருமான டத்தோ எம்.சரவணன், மற்றும் மஇகாவின் முன்னாள் இளைஞர் பகுதித் தலைவரும் மலேசிய இந்தியர் காற்பந்து சங்கத் தலைவருமான டத்தோ டி.மோகன் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடினார்.

“மலேசியாவாழ் தமிழர்களின் மொழிப் பற்றைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது” என விவரித்த பிரகாஷ் சாமி, நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும், நிலைப்பாட்டினையும் தனது சந்திப்பின்போது சரவணன், மோகனிடம் விவரித்தார்.

தமிழ்மொழி வளர்ச்சியில் மலேசியத் தமிழர்களின் பங்களிப்பையும் பிரகாஷ் வெகுவாகப் பாராட்டினார்.

#TamilSchoolmychoice

அமெரிக்க தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து செயல்படுவது, அவர்களின் செயல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற கருத்துகள் இந்த சந்திப்பின் போது பரிமாறிக்கொள்ளப்பட்டது.

பிரகாஷ் சாமியுடனான சந்திப்பு தங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்ததோடு, அமெரிக்கத் தமிழ்ச் சங்கம் குறித்த தகவல்களைப் பெறுவதற்கும் உதவியாக இருந்தது என இந்த சந்திப்பு குறித்து சரவணனும், டி.மோகனும் தெரிவித்தனர்.